இலங்கை – இந்திய அணிகள் கலந்துகொள்ளும் மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் இன்று (27) இடம்பெறவுள்ளது. இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்கவுக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதனால், இன்றைய போட்டியில் சாமர கப்புகெதர தலைமை தாங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்றைய போட்டியில் இலங்கை அணி கூடிய கவனம் செலுத்தும் என புதிய தலைவர் கூறியுள்ளார். பகல்-இரவுப் போட்டியாக இன்றைய போட்டியும் இடம்பெறவுள்ளது. கடந்த போட்டிக்கு கால நிலை இடைஞ்சலாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.