Internet Explorer இன் பிரவுசர் சேவையை முழுவதுமாக ஜூன் 15, 2022 முதல் நிறுத்தப்போவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
27 ஆண்டுகளாக இணைய சேவை வழங்கி வந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் ஆதரவை இழந்து வந்தது. கூகுள் மற்றும் பயர்பாக்ஸ் உள்ளிட்ட பிரவுசர்களின் வளர்ச்சிக்குப் பிறகு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படவில்லை. 25 ஆண்டுகளுக்கும் மேலாக பிரவுசர் சேவையில் இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனம், தற்போது தங்களின் இணைய சேவைக்கான ஆதரவை நிறுத்தப்போவதாக, இனி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்பாட்டுக்கு இல்லை கூறியுள்ளது. இந்த ஆண்டு ஜூன் முதல் முழுமையாக இந்த சேவை நிறுத்தப்படுகிறது.
தற்போது கூகுள் குரோம், மொஸில்லா பயர்பாக்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் போன்ற வலுவான போட்டியாளர்கள் நடுவில் எஸ்ப்ளோரர் பிரவுசரால் தாக்கு பிடிக்க முடியவில்லை.கூகுள், எட்ஜ் மற்றும் சஃபாரி போன்ற பிரவுசர்கள் அதிக வேக இணைய சேவையை வழங்குகின்றன. அந்த பிரவுசர்களின் Search Engine -கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் தேடுபொறியை விடவிரைவாக தகவல்களை திரட்டி பயனாளர்களுக்கு கொடுத்து விடுகின்றன. அந்த வேகத்துக்கு Internet Explorer ஈடுகொடுக்க முடியாததால் யூசர்கள் மாற்று பிரவுசர்களை பயன்படுத்தத் தொடங்கினார்கள். கடந்த ஆண்டே வெளியான இந்த அறிக்கையைத் தொடர்ந்து, விண்டோஸ் 10 லாங்டெர்ம் சர்வீஸிங் சேனல் தற்போது வரை இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை கொண்டுள்ளது. ஆனால், அனைத்து பயனர்களுக்குமான வெர்சன்கள் பிரவுசரில் கிடைக்காது. படிப்படியாக பல்வேறு ஆப்சன்கள் குறைக்கப்பட்டு வந்தது. தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட உள்ளது.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறி்விப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Outlook, OneDrive and Office 365 போன்ற பியூச்சர்கள் 2021 ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படாது என ஏற்கனவே அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி இருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே மைக்ரோசாப்ட் வெப்-ன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.