குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் வெளியிட்டிருக்கும் புதிய தரவுகளுக்கமைய தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய நாட்டின் வருடாந்த பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் நுற்றுக்கு 33.8வீதமாக பதிவாகி உள்ளது.
உணவுப்பொருட்களின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் நூற்றுக்கு 29.5 ஆக பதிவாகி இருப்பதுடன் அது ஏப்ரல் மாதத்தில் நூற்றுக்கு 45.1ஆக பதிவாகி இருக்கின்றது.
அதேபோன்று உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் நூற்றுக்கு 14.5 ஆக பதிவாகி இருந்ததுடன் அது ஏப்ரல் மாதத்தில் நூற்றுக்கு 23.9ஆக பதிவாகி இருக்கின்றது.
அத்துடன் குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் தரவுகளுக்கமைய, மார்ச் மாதத்துக்கு இணையாக ஏப்ரல் மாதத்தில் குடும்பம் ஒன்றின் மாதச் செலவு 5672.59 ரூபாவால் அதிகரித்துள்ளது.