பாலிவுட்டில் பிரபல நடிகராக இருக்கும் ராஜ் குமார் ராவ், தற்போது சுதந்திர போராட்ட வீரர் சுபாசந்திர போஸின் வாழ்க்கை வரலாறான போஸ் டெட்/அலைவ் என்ற வெப் சிரீஸில் நடிக்கிறார். . புல்கிட் இயக்கி உள்ளார். 9 எபிசோடுகளாக ஒளிப்பரப்பாக இருக்கும் இந்த வெப் சிரீஸ், நவ., 20 முதல் ஆரம்பமாகி உள்ளது.
சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை கதையில் நடிப்பது பற்றி ராஜ்குமார் ராவ் கூறுகையில், ஒருவரின் வாழ்க்கை கதையில் நடிக்கும் போது நமக்கான பொறுப்பு இன்னும் அதிகரிக்கும். ஏனென்றால் மக்கள், அந்த நபரை பற்றி நன்கு அறிந்தவர்கள், அதனால் நிச்சயம் ஒப்பிட்டு பார்ப்பார்கள். இப்படி ஒருவரின் வாழ்க்கை படத்தில் நடிக்கும்போது அவரைப்பற்றி நன்று தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் அவரை நாம் திரையில் பிரதிபலிக்கும்போது அந்த தருணம் மிக அற்புதமாக இருக்கும் என்றார்.