ஒருநாளாவது முதல்வரா உட்காரணும் அழுது அடம்பிடிக்கும் சசி..!
தமிழக முதல்வராக சசிகலா நாளை பதவியேற்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களின் கூட்டம் நேற்று நடந்தது. அதில் சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக முதல்வர் பன்னீர்செல்வம், கவர்னருக்கு நேற்று இரவு கடிதம் அனுப்பினார்.
அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக, கவர்னர் வித்யாசாகர் ராவ், இன்று அறிவித்தார்.
இந்த சூழ்நிலையில், முதல்வராக சசிகலா எப்போது பொறுப்பேற்க உள்ளார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. நாளை, 7 ம் தேதி அல்லது, 9ம் தேதி பதவியேற்கலாம் என கூறப்பட்டது.ஆனால், கவர்னர் சென்னையில் இல்லை.
கோவையில் இருந்து நேற்று இரவு டில்லி புறப்பட்டு சென்றார். அவர் நாளையே சென்னை திரும்புவார் என முதலில் கூறப்பட்டது.
ஆனால், தற்போது அவர் இன்று இரவே சென்னை திரும்பலாம் என்றும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்றும் விமான நிலையங்கள் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதே நேரத்தில், சென்னை பல்கலைகழகத்தில் உள்ள நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்பு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அதை அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி உள்ளிட்ட சிலர் பார்வையிட்டுள்ளனர்.
இது குறித்து, தலைமை செயலக வட்டாரங்கள் கூறுகையில், 10ம் தேதி பவுர்ணமி வருகிறது. அதன் பிறகு தேய்பிறை. எனவே, 9ம் தேதிக்கு முன் பதவியேற்பு இருக்கலாம். குறிப்பாக, நாளையே பதவியேற்பு விழா நடக்க வாய்ப்பு உள்ளது.
எதுவாக இருந்தாலும், கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது என்று குறிப்பிடுகின்றனர்.
ஏன் என்றால் அவர் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை கிடைப்பது உறுதியாகிவிட்ட ஒன்று என்றும், அப்படி சிறைக்கு சென்றால் இனி முதல்வராக எந்த காலத்திலும் வரமுடியாது என்பதாலும்.
இடைப்பட்ட சில தினங்களாவது முதல்வராக அமரவேண்டும் என்று சசிகலா போய்ஸ் கார்டனில் அடம்பிடித்து அழுவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
– See more at: http://www.canadamirror.com/canada/80257.html#sthash.IUEKvQW3.dpuf