கொவிட்-19 இன் ஆபத்தான ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
புதிய மாறுபாடு குறித்து நிபுணர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பதாகவும், முழுமையான பகுப்பாய்வுக்குப் பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பார்கள்.
முடக்கல் நிலைக்கு செல்லாதிருக்க மக்கள் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]