ஒன்ராறியோ வீடொன்றில் வியத்தகு விசித்திர விஷ பாம்புகள் வீடொன்றில்
ஒன்ராறியோ- நயாகரா பிரதேச பொலிசார் பல கொடிய பாம்புகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நெடுஞ்சாலை 20 மற்றும் ஹன்ஸ்லர் வீதிக்கு அருகில் தொறொல்ட் எனும் இடத்தில் அமைந்துள்ள வீடொன்று கடந்த சனிக்கிழமை மாலை உடைக்கப்பட்டு அங்கிருந்த ஊரும் பிராணிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இளம் பருவ நாக பாம்பு இனங்கள், நச்சு பாம்புகள், கட்டுவிரியன்கள் மற்றும் விரியன் பாம்புகள் அத்துடன் ஒரு கர்ப்பினி மலைப்பாம்பு ஆகியன திருடப்பட்ட பாம்புகளில் அடங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இவைகள் 12 முதல் 106சென்ரிமீற்றர்கள் அளவுடையவைகள். இதே சமயம் நச்சு தன்மையற்ற கர்ப்பினி மலைப்பாம்பு 200சென்ரி மீற்றர்கள் நீளமும் கிட்டத்தட்ட 7-கிலோ கிராம்கள் எடையும் கொண்டதாகும்.
நாக பாம்பின் நஞ்சு நரம்பு மண்டலத்தில் செயற்படக்கூடிய நஞ்சை கொண்டிருப்பதால் சுவாச செயலிழப்பு மற்றும் இறுதியில் மரணம் ஏற்படுத்த கூடியதெனவும் குழந்தை நாகங்கள் முழு பலத்துடனான விஷத்தை கொண்டுள்ளதால் தங்கள் பெற்றோர்களைப் போல் தங்களை பாதுகாத்து கொள்ள கூடியவை எனவும் இக்காரணங்களால் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இப்பாம்புகள் இணையவழி வியாபாரத்திற்காக வீட்டில் வளர்க்கப்பட்டதால் வீடு இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிசார் நம்புகின்றனர்.