கனடா தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற ஹில்லில் இதுவரை கண்டிராக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. தாங்கள் இதுவரை கண்டிராத ஒன்று என முன்னாள் ஒட்டவா பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கனரக தடுப்புக்கள், பொதிகள் தேடல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
பாரியதொரு ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று பாராளுமன்ற ஹில் மட்டுமன்றி நகரம் பூராகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளதென பாராளுமன்ற பாதுகாப்பு சேவைகள் தலைமை கண்காணிப்பாளர் ஜேன் மக்லச்சி தெரிவித்துள்ளார்.
2014-அக்டோபரில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கோப்ரல் நேதன் சிரிலோ கொல்லப்பட்ட தொடர்ந்து சென்டர் புளொக்கில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்களை தொடர்ந்து இப்பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படுகின்றது.
பாராளுமன்ற ஹில் பயங்கரவாதிகளானவர்களிற்கு ஒரு கவர்ச்சிமிக்க இலக்காக அமையுமாதலால் நகரின் வரலாற்றிலேயே மிக பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாராளுமன்ற ஹில் ஒரு முக்கிய இடமாகும்.
இவ்வருடத்தின் கனடா தின பாதுகாப்பு செலவு மட்டும் மொத்தமாக 2.5மில்லியன் டொலர்களாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.
கனடா தினத்தன்று வீதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் திரையிடல் பகுதிகளில் திரையிடல் செய்தவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர்.
தங்கள் திட்டங்கள் குறித்து அதிக விபரங்களளை அதிகாரிகள் வழங்க தயங்குகின்றனர் ஆனால் மணல் நிரப்பப் பட்ட டம் லாரிகள் முக்கிய சந்திப்புக்களை தடை செய்ய உபயோகிக்கப்படும் எனவும் கார் அல்லது டிரக் சனக்கூட்டத்திற்குள் நுழைவது தடைசெய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை தின கொண்டாட்டத்தில் கடந்த வருடம் Nice, பிரான்சில் சன கூட்டத்திற்குள் ஒரு தாக்குதல் இடம்பெற்றது.
கடந்த வருடங்களை விட இவை இந்த வருடத்தின் குறிப்பிடத்தக்க மாற்றங்களாகும்.
யூலை 1-ந்திகதி HRH Prince Charles மற்றும் கோர்ன்வால் சீமாட்டி கமிலா ஒட்டாவா வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.