ஐ.நா.மனித உரிமை சபையில் சிறிலங்கா விடயம் முக்கியத்துவம் பெறவில்லை!
ஐ.நா.மனித உரிமை சபை, ஜெனிவா, 13 யூலை 2016 – இன்று ஜெனிவாவில் ஆரம்பாமாகியுள்ள 32வது கூட்டத் தொடர், தென் கொரியாவின் ஐ. நா. பிரதிநிதி திரு. சோய் கியோங்கிளிம் தலைமையில், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் திரு அல் குசேயுனும் பிரசன்னத்துடன் ஆரம்பமாகியிருந்தது. ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இன்று சிறிலங்கா பற்றிய உரையாற்றியிருந்தார்
வழமையாக ஈழத் தமிழ் மக்களினால் எதிர்பார்க்கப்பட்ட, தமிழ் மக்களது விடயம், தற்பொழுது ஆரம்பாமாகியுள்ள 32வது கூட்டத் தொடரில் எவ்வித முக்கியத்துவம் பெற மாட்டாது என்பது மிகவும் கலைக்கூரிய விடயம்.
கடந்த செப்டம்பர் மாதம் ஐ. நா .மனித உரிமை சபையினால் சிறிலங்கா மீது நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய, இவ் 32வது கூட்டத் தொடரில், ஐ.நா.மனித உரிமை ஆணையாளரினால் ஓர் வாய்மூல அறிக்கை வெளியாகும் என்பதை யாவரும் அறிந்திருந்தார்கள்.
ஆனால் சகலரின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, 32வது கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில், சிறிலங்கா பற்றி கருத்துக் கூறுவதற்கான நேரம், இவ் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் ஒதுக்கப்படவில்லை. மாறாக, சிறிலங்கா பற்றிய விடயம் ஓரு சாதரணமான நிகழ்ச்சி நிரலான, உலக நாடுகள் பற்றிய விடயத்தின் கீழ் ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் உரியாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிக நீண்ட காலமாக ஐ. நா. மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் செயற்பாட்டாளர் கருத்து கூறுகையில், “கடந்த சில மாதங்களில், சிறிலங்காவின் ஆறு அமைச்சர்கள் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் திரு அல் குசேனை சந்தித்து தமது நிலைபாடுகளை கூறியுள்ளதாகவும், ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலோ, ஈழத்தமிழ் மக்கள் சார்பிலோ இன்று வரை யாரும் ஐ. நா.
மனித உரிமை ஆணையாளரை சந்திக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச பிரச்சாரத்தில், சிறிலங்கா அரசு இமய மலையின் உச்சியில் உள்ளதாகவும், ஈழத் தமிழர், புலம் பெயர் வாழ் தமிழர்களது செயற்பாடுகள், இமய மலையின் அடிவாரத்தில் கூட இல்லையென கவலையுடன் கூறினார்.
ஈழத் தமிழர்களிடையே, விசேடமாக புலம் பெயர் வாழ் தமிழர்களிடையே காணப்படும் பிரிவுகளை, சிறிலங்கா அரசுகள் நன்றாக பயன்படுத்துகிறது என்பதுடன், சிறிலங்காவின் மாறுபட்ட அரசாங்கங்கள், ஈழத் தமிழர் சார்பான ஐ.நா. மனித உரிமை செயற்பாடுகளை, சில தமிழ் கோடாரீக் கம்புகளை பாவித்து நாசமாக்கியுள்ளதாகவும்” கூறினார்.
ஐ.நா.மனித உரிமை சபையின் 32 கூட்டத் தொடர், எதிர்வரும் யூலை மாதம் 1ம் திகதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.