இலங்கை இராணுவம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் அதிகாரி யஸ்மின் சூகா முன்வைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் செய்த் ராத் ஹுசைன் இலங்கை தொடர்பில் புதிய விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலரின் வாக்கு மூலத்தின் படி தமிழர்கள் 60 பேர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக யஸ்மின் ஐ.நா.வில் முறைப்பாடு செய்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இந்த சித்திரவதை இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தம் முடிந்து கடந்த 8 வருடங்களின் பின்னர் முன்வைக்கப்பட்டுள்ள இந்த முறைப்பாட்டை இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க முற்றாக நிராகரித்துள்ளார்.
யஸ்மின் சூகாவின் முறைப்பாட்டில் முன்னாள் புலி உறுப்பினர்கள் 60 பேரும் யார் என்பது குறிப்பிடப்படாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது