ஐ.நா.அமைதிகாக்கும் நடவடிக்கைகளிற்கு லிபரல் 600-படை வீரர்கள் 450-மில்லியன் டொலர்கள் வழங்க உறுதி.
ஒட்டாவா- கனடா பணம் மற்றும் மிக முக்கியமாக உலகம் பூராகவும் அமைதி காக்கும் பணிகளிற்காக படையினரையும் வழங்க முன்வந்துள்ளதாக லிபரல் அரசாங்கம் ஐக்கிய நாடுகளிற்கு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சய்ஜான் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஸ்ரெபனி டியோன் இருவரும் 600 கனடிய படைவீரர்கள்–பொறியியலாளர்கள் மற்றும் மருத்துவ பிரிவினர் உட்பட்ட—எதிர்கால அமைதிகாக்கும் பணிகளிற்காக வழங்குதல் குறித்த திட்டங்களை வெளியிட்டுள்ளனர்.அத்துடன் ஹெலிஹொப்டர்கள் மற்றும் விமானங்கள் போன்ற உபகரணங்களையும் வழங்க திட்டமிட்டுள்ளனர்.
அத்துடன் அரசாங்கம் 450மில்லியன் டொலர்களை அடுத்த 3 வருடங்களிற்கு ஓதுக்குகின்றது. உலகம் முழுவதிலும் பாதுகாப்பு மற்றும் அமைதி பேணும் திட்டங்களிற்காகவும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவியன் நிபுணர்களை நியமிப்பதற்காகவும் பயன் படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.