ஐ.நாவில் மற்றுமொரு சவாலையும் கடக்குமா சிறிலங்கா?
எதிர்வரும் வாரத்தில் தொடங்கவுள்ள ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்கா மற்றுமொரு பாரிய சவாலை கடந்தாக வேண்டுமென கொழும்பு ஊடகமொன்று
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எச்சரித்துள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் பொறுப்புடமைக்கான பன்னாட்டு நிபுணர் குழுவின் அறிக்கை Sri lanka – Monitoring Accountability Panel (MAP) , ஜூன்
மாத ஐ.நா மனித உரிமைச்சபை கூட்டத் தொடரின் வெளிவர இருப்பதனைக் சுட்டிக்காட்டியே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
போர்க்குற்றம், மின்சாரக்கதிரை போன்ற பேச்சுக்களுக்கே இனி ஐ.நா மனித உரிமைச்சபையில் இடமில்லை என்றும், ஐநாவின் மனித உரிமைகள் பேரவையை தாங்கள் இலகுவில் சமாளித்துவிடப் போவதாகவும் சிறிலங்காவின் அமைச்சர்கள் தொடர்சியாக அறிவித்து வந்துள்ளனர்.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் உயர் ஆணையாளர் சீட் றாட் அல் குசைன் அவர்கள் , கடந்தாண்டு (2015) பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய,
சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் செயல்பாடுகள் பற்றி ஒரு வாய் மூல அறிக்கையை, தொடங்கவிருக்கும் கூட்டத் தொடர் அமர்வில் 27ம் திகதி அளவில் சமர்ப்பிக்கவிருக்கிறார்.
ஆணையாளர் அவர்கள் தனது அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்னராக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் பல்வேறு உலகளாவிய அமைப்புக்கள் ஆணையாளரை சந்தித்து,
பிரேரணை நிறைவேற் சிறிலங்கா அரசாங்கம், எத்தகைய ஆயத்தங்களை செய்து முடித்திருக்கிறது என்பதைப்பற்றி கலந்துரையாட இருக்கிறார்கள் அறியமுடிகின்றது.
இந்த சந்திப்புக்கள் ஐ.நா ஆணையாளர் சமர்ப்பிக்க இருக்கும் அறிக்கையில் தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது பசப்பு அறிக்கைகளுடன் ஜெனிவா வந்திறங்க தயாராகிக் கொண்டிருக்கும் சிறிலங்கா அரசுககு பாரிய சவாலாக முடியலாம்.
இதற்கு முன்னராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் பொறுப்புடமைக்கான பன்னாட்டு நிபுணர் குழுவின் அறிக்கை (Sri lanka – Monitoring Accountability Panel (MAP) ,
ஜூன் மாத ஐ.நா மனித உரிமைச்சபை கூட்டத் தொடரின் போது வெளிவர இருக்கின்றது.
பன்னாட்டு சட்ட அறிஞர்கள், போர்க்குற்ற விசாரணையாளர்கள், மனித உரிமைவாதிகள் என பலரையும் கூட்டி அமைக்கப்பட்ட இந்த நிபுணர் குழு, ஜெனிவாவில் பேரவையும், சிறிலங்கா அரசு பொறுப்பு கூறலில் காட்டி வரும் முன்னேற்றங்களை கண்காணித்து வருகிறது.
ஐ.நா ஆணையாளரைச் சந்தித்து பேரவையின் நம்பகத்தன்மையை பரிசோதிக்க முயல்வதின் மூலம், சிறிலங்கா மீது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பன்னாட்டு நிபுணர் குழு அழுத்தம் கொடுக்கப் போகிறார்கள்.
பன்னாட்டு அறிஞர்களை ஜெனிவாவில் அமர்த்தி கண்காணித்து வரும் நாடுகடந்த அரசாங்கம், தனது சுயநிர்ணய உரிமை கோரிக்கைக்கு அங்கீகாரம் தேடும் வகையில் பொது வாக்கெடுப்பொன்றுக்கான முயற்சிகளையும் முன்னெடுத்து வருவதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.