ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார். அதில் எந்ததொரு மாற்றமும் இல்லையென அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
மொரட்டுவவில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எரான் மேலும் கூறியுள்ளதாவது, நாம் இன்னும் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யவில்லை. மேலும் எமது கட்சிக்குள் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கென ஒரு அமைப்பு உள்ளது.
அத்துடன் கட்சியின் செயற்குழு மற்றும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு அதனடிப்படையிலேயே ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்போம்.
ஐக்கிய தேசியக் கட்சியிலேயே ஜனநாயகம் எப்போதும் உள்ளது” என எரான் தெரிவித்துள்ளார்.