சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத் துவத்தைக் கையளிக்கவேண்டும் என யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அமைப்பாளரும் , பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளையும் ஒன்றிணைக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தொலைப்பேசி அடையாளத்தின் கீழ் ஐக்கிய தேசிய கட்சி ஒரு கூட்ட ணியை உருவாக்க முடியும்.
அவ்வாறு இல்லாவிட்டால் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத் துவத்தைக் கையளிக்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய ஒரே ஒரு தலைவர் சஜித் பிரேமதாச மட்டுமே என்ற கரு த்து மக்கள் மத்தியில் உள்ளது என கண்டியில் ஊடக சந்திப்பில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.