ஐரோப்பிய யூனியன்-கனடா வர்த்தக ஒப்பந்த உடன்படிக்கையை ஆதரிக்க பெல்ஜியம் முடிவு.
ஐரோப்பிய யூனியன் மற்றும் கனடாவிற்கிடையிலான ஒரு மைல்கல்லாக விளங்கும் சுதந்திர வர்த்தக ஓப்பந்தத்தை ஆதரிக்க பெல்ஜியம் முடிவு செய்துள்ளதாக அறியப்படுகின்றது.
இந்த ஒப்பந்தம் சில நாட்களிற்குள் கையெழுத்திடப்படும் எனவும் கூறப்படுகின்றது.பெல்ஜியம் அரசாங்கம் வியாழக்கிழமை தனது பிராந்திய அதிகாரிகளின் முட்டுக்கட்டையை கடந்து வந்தபின்னர் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியத்தின் பிராந்தியமான வலொனியாவுடனான முடக்கத்தை கடந்து ஒரு முடிவிற்கு வந்துள்ளதாக பெல்ஜியம் பிரதம மந்திரி சார்ள்ஸ் மைக்கல் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் பிராந்திய சட்ட மன்றங்களிற்கூடாக வெள்ளிக்கிழமை செல்லும்.
ஒப்பந்தம் வியாழக்கிழமை புறுசெல்ஸ் மற்றும் கனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோவுடன் கைச்சாத்திடல் சாத்தியமாகாதென கூறப்படுகின்றது.
ட்ரூடோவின் காரியாலயம் ஐரோப்பிய ஒன்றிய அதிபர் டொனால்ட் ரஸ்க்கின் காரியாலயத்திலிருந்து மேலதிக விபரங்கள் குறித்த அழைப்பிற்காக காத்திருக்கின்றதாக அறியப்படுகின்றது.
நடை முறைகள் பூர்த்தி செய்யப்பட்டதும் தொடர்பு கொள்வதாக ரஸ்க் தெரிவித்துள்ளார்.