ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்ட தொடரின் நேற்றைய ஆட்டத்தில் குரூப் எப் பிரிவில் போர்த்துக்கல், ஹங்கேரி அணிகள் மோதின.
முதல் பாதியில் இரு அணி வீரர்களும் எந்த கோலும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனிலையில் இருந்தது. போட்டியின் இரண்டாவது பாதியின் 84 ஆவது நிமிடத்தில் போர்த்துக்கல் அணி ஒரு கோல் அடித்தது.
மேலும் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானா ரொனால்டோ 87 ஆவது நிமிடம் மற்றும் 92 ஆவது நிமிடங்களில் 2 கோல்களை அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், போர்த்துக்கல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
மற்றொரு குரூப் எப் பிரிவு போட்டியில் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடந்த முதல் பாதி ஆட்டத்தில் 20 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஹம்மெல்ஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்காத நிலையில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனியை வீழ்த்தியது.
இதேவேளை நேற்றைய தினம் போர்த்துக்கல் அணியின் 36 வயதான ரொனால்டோ ஐரோப்பிய கால்பந்தாட்ட வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.
இதற்கு முன் பிரான்சின் மைக்கேல் பிளாட்டினி 9 கோல் போட்டதே சாதனையாக இருந்த நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 11 கோல்கள் அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://Facebook page / easy 24 news