ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியாவுடன் கனடா தொடர்ந்தும் பணியாற்றும்
ஐரோப்பிய ஒன்றியத்தில், பிரித்தானியாவின் நிலை குறித்து நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) நடைபெற்ற குடியொப்ப வாக்கெடுப்பின் பிரகாரம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த கனேடிய பிரதமர், ‘ எமக்கு இடையில் நிலவும் பொதுவான நல்லுறவு மற்றும் இணைந்த வரலாறுகள் வர்த்தக பங்காளிகளாக உருவாக்கியுள்ளது. இதனை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ந்தும் பணியாற்றுவோம்’ என தெரிவித்துள்ளார்.
மேலும், பிரித்தானியாவின் வெளியேற்றத்தினால் ஏற்படும் ஸ்திரமற்ற நிலமையை தொடர்ந்தும் கண்காணித்து, ஸ்திரதன்மையை பராமரிக்க மற்றும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்க உலகம் முழுவதும் பங்காளிகள் வேலை செய்வதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
– See more at: http://www.canadamirror.com/canada/64855.html#sthash.2cbSk9AR.dpuf