ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்த ஒப்பந்தம் மேற்கொள்ள தயார்: கனடா
ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என நம்புவதாகவும் கனடா தெரிவித்துள்ளது.
பெல்ஜியத்தின் ஒரு பிராந்தியம் ஐரோப்பிய ஒன்றிய – கனேடிய ஒப்பந்தத்திற்கு தெரிவித்த எதிர்ப்பை நீக்கிக் கொண்டுள்ளமையை அடுத்தே, கடனா இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சென்றவேளை நேற்று முன்தினம் (வியாழக் கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, கனேடிய அரசாங்கம் சார்பாக இவ்விடயத்தை கனேடிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீஃபன் டையன் தெரிவித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், நான் அறிவித்த செய்தி நிஜத்தில் இடம்பெற்றால், அது சிறந்த செய்தியாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றிய – கனேடிய பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்திற்கு பிரான்ஸ் பூரண ஆதரவை வழங்கும் என பிரான்ஸ் வெளியறவு அமைச்சர் ஜேன்-மார்க் அய்ரால்ட் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.