ஐரோப்பாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஊக்குவிக்கப்பட வேண்டும்
உலக பொருளாதார நாடுகளின் ஜி-7 உச்சிமாநாட்டில் முதன்முறையாக கலந்து கொண்டுள்ள கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ ஐரோப்பாவுடனான கனடாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பெரிய நாடுகளால் ஊக்குவிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஊடுருவல் குறித்தும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், ஜேர்மனிய அதிபர் ஏஞ்சலா மேர்கலுடனான இருதரப்பு சந்திப்பின் போது, கனடா-ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது. அதேவேளை பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்ஸ்கொய்ஸ் கொலான்ட் உடனான கலந்துரையாடலில் சர்வதேச வர்த்தக நன்மைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது ‘வர்த்தக தேவையுடைய தொழில்களுக்கு 50 சதவிகிதம் ஊதியம் அதிகம் என்பது எமக்கு தெரியும். எனவே இது குறித்து கலந்துரையாட வேண்டும்’ என ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார்.
உலகத் தலைவர்களின் இந்த ஜி-7 உச்சி மாநாட்டில் உலக பொருளாதாம் குறித்து விவாதிக்கப்படுகின்றது.