ஐரோப்பா லீக் இறுதிப் போட்டியில் வில்லர்ரியல் அணி மான்செஸ்டர் யுனைடெட்டை 11-10 என்ற கணக்கில் பெனால்டிகளால் தோற்கடித்தது.
ஐரோப்பா லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி வில்லர்ரியல் மற்றும் மான்செஸ்டர் யுனைட்டட் அணிகளுக்கிடையில் நடைபெற்றது.
ஐரோப்பியாவில் நடைபெறும் முக்கிய கால்பந்து தொடர்களில் ஐரோப்பா லீக் பிரபலமானது.
நடப்பு சீசனில் 48 அணிகள் லீக் சுற்றில் விளையாடின. அரையிறுதியில் மான்செஸ்டர் யுனைட்டட் (இங்கிலாந்து) அணி ரோமா (இத்தாலி) அணியையும், வில்லாரியல் (ஸ்பெயின்) அணி ஆர்செனல் (இங்கிலாந்து) அணியையும் வீழ்த்தின.
இதைத் தொடர்ந்து போலந்தின் குடான்ஸ்க் நகரில் பதன்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் வில்லர்ரியல் – மான்செஸ்டர் யுனைட்டட் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் பெனால்டிகளினால் மான்செஸ்டர் யுனைடெட்டை 11-10 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது முதல் பெரிய கிண்ணத்தை கைப்பற்றியது வில்லர்ரியல்.