ஐந்து முதலைகளை கொன்று சிறுவனின் உடலை மீட்ட பொலிசார்: டிஸ்னி லேண்டில் பயங்கரம்
அமெரிக்காவில் உள்ள ரிசார்ட்டில் 2 வயது சிறுவனை முதலை ஒன்று இழுத்துச்சென்ற சம்பவத்திற்கு பிறகு, ஐந்து முதலைகளை கொன்று சிறுவனின் உடலை பொலிசார் மீட்டுள்ளனர்.
புளோரிடா மாகாணத்தில் உள்ள வால்ட் டிஸ்னி லேண்டில் நேற்று முன் தினம் ஒரு குடும்பத்தினர் பொழுதுபோக்கிற்காக சென்றுள்ளனர்.
அப்போது, பெற்றோரை விட்டு விலகி ஏரிக்கு அருகே விளையாடிக்கொண்டு இருந்த 2 வயது சிறுவனை முதலை தண்ணீரிக்குள் இழுத்துச் சென்றுள்ளது.
இக்காட்சியை கண்ட பெற்றோர் அலறி துடித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் சிறுவனை மீட்கும் பணியில் இறங்கினர்.
நீச்சல் வீரர்கள் குளத்தில் பாதுகாப்பாக குதித்து குழந்தையை தேடி வந்துள்ளனர்.
குழந்தையை முதலை விழுங்கியிருக்கும் என சந்தேகித்த பொலிசார் 5 முதலைகளை கொன்று அவற்றின் வயிற்றில் சிறுவனின் உடல் பாகங்கள் இருக்கின்றனவா என பொலிசார் சோதனையிட்டுள்ளனர்.
ஆனால், ஒரு முதலையின் வயிற்றில் கூட சிறுவனின் உடல் இல்லை. எனினும், முயற்சியை கைவிடாத நீச்சல் வீரர்கள் தேடியபோது தண்ணீரிக்குள் சிறுவனின் உடல் எந்த காயங்களும் இன்றி கிடந்துள்ளது.
சடலத்தை மீட்ட நீச்சல் வீரர்கள் அதனை கரைக்கு கொண்டு வந்தனர். பொலிசார் மற்றும் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், சிறுவனின் பெயர் Lane Graves என கூறப்பட்டாலும் இவன் தான் காணாமல் போன சிறுவன் என பெற்றோர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
ஆனால், உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சடலம் முதலை இழுத்துச் சென்ற சிறுவன் தான் என பொலிசார் உறுதிப்பட தெரிவித்துள்ளனர்
.