முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது தற்போதைய வெளிவிவகார அமைச்சுப் பதவியை இன்று (10) 5 நிபந்தனைகளை முன்வைத்து இராஜினாமா செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தான் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் தனது அமைச்சின் காரியாலய ஊழியர்களை அவ்வாறே கலைத்துவிடாமல் வைத்திருத்தல், மத்திய வங்கி முறி மோசடி விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை 3 மாதங்களுக்குள் நிறைவு செய்தல் என்பனவும் அந்த ஐந்து நிபந்தனைகளில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்கு கூட வருகை தராமல், ஜனாதியதி, ரவி கருணாநாயக்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.