ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. எனவே எதிர்வரும் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் இம்மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 18 ஆம் திகதி புலமைப் பரிசில் பரீட்சை நிறைவடையும் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என்றும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மேலதிக வகுப்புக்கள் மாத்திரமின்றி கருத்தரங்குகள், விரிவுரைகள், பயிற்சி பட்டறைகள், மாதிரி பரீட்சைகளை நடத்துதல் உள்ளிட்ட அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பரீட்சைக்கான மாதிரி வினாக்கள் வழங்கப்படும் என இலத்திரனியல் ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்கள் ஊடாக அறிவித்தல்களை வெளியிடுவது மற்றும் பதாதைகளை காட்சிப்படுத்துவது உள்ளிட்டவையும் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.