ஐதராபாத் அரசு மருத்துவமனையில் 29 பேர் பலி: அதிர்ச்சியூட்டும் காரணம்!
ஐதராபாத்தில் அரசின் கிழ் இயங்கி வரும் காந்தி மருத்துவமனையில் ஒரே நாளில் 21 நோயாளிகள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மின் தடையே நோயாளிகளின் உயிரழப்பிற்கு முக்கிய காரணம் என மருத்துவ ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சம்பவம் குறித்து மருத்துவர்கள் கூறியதாவது, பிற்பகல் 3 மணி முதலே தொடர்ந்து மின் தடை ஏற்பட்டு வந்தது, மருத்துவமனையில் நான்கு ஜெனரேட்டர்கள் உள்ளது, எனினும் மின் தடைக்கான காரணத்தை கண்டுபிடிக்க அவை இயக்கபடவில்லை என கூறியுள்ளனர்.
இதனால் மருத்துவமனையின் பல முக்கிய வார்டுகளில் இருந்த நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், சிலர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் குறித்து தெலுங்கானா சுகாதார அமைச்சர் டாக்டர் சி லக்ஸ்மா ரெட்டி கூறியதாவது, உயிரிழப்பிற்கு மின் தடையே காரணம் என கூறுவது மிக தவறு, இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குறை கூறியுள்ளார்.
சம்பவத்தின் போது மருத்துவமனை கண்காணிப்பாளராக இருந்த பேராசிரியர் சி வி சாலம் கூறியதாவது, உயிரிழந்த 21 பேரையும் குறித்து விசாரணை நடத்த வேண்டும், எனெனில் உயிரிழப்பிற்கும், மின் தடைக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு இருக்கலாம்.
எனினும் திங்கட்கிழமை முதல் இதுதொடர்பான விசாரணை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.