ஐசிசி 2016 கால்பந்து: பார்சிலோனாவை கதிகலங்க வைத்து லிவர்பூல் அசத்தல் வெற்றி
நட்சத்திர கிளப் அணிகள் பங்கேற்று விளையாடும் சர்வதேச சாம்பியன்ஸ் கிண்ண கால்பந்து தொடரில் நேற்று வெம்ப்ளியில் நடந்த ஆட்டத்தில் பிரித்தானியாவின் லிவர்பூல் அணியும், ஸ்பெயினின் பார்சிலோனா அணியும் மோதின.
இதில் உள்ளுர் ரசிகர்களின் ஆதரவை கொண்ட லிவர்பூல் அணி 4-0 என்ற கோல் கணக்கில் மெஸ்ஸி உட்பட பல நட்சத்திர வீரர்களை கொண்ட பார்சிலோனா அணியை கதிகலங்க வைத்து அசத்தலாக வெற்றிப்பெற்றது.
வெம்ப்ளியில் தொடங்கிய ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் லிவர்பூல் அணி வீரர் மானே முதல் கோல் அடித்து அசத்தினார். முதல் பாதி முடிவில் 1-0 என லிவர்பூல் அணி முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் 47வது நிமிடத்தில் பார்சிலோனா வீரர் Mascherano தவறுதலாக சேம் சைடு கோல் அடித்தார். இதன் மூலம் லிவர்பூல் அணி 2-0 என மேலும் வலுப்பெற்றது.
தொடர்ந்து 48வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் மற்றொரு வீரர் ORIGI கோல் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆட்டத்தின் 93வது நிமிடத்தில் மீண்டும் லிவர்பூல் அணியின் மற்றொரு வீரரான GRUJIC கோல் அடித்தார்.
இறுதிவரை போராடிய பார்சிலோனா அணி வீரர்களால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. இதன் மூலம் லிவர்பூல் அணி 4-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றிப்பெற்றது.