ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகியவற்றின் பிரதான பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி புதியவர்களை அப்பதவிகளுக்கு நியமிக்க எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று வெள்ளிக்கிழமை (27) நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன் பிரகாரம்,
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர்
ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் – கேகாலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம்
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத் தலைவர் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண
ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.


