ஐக்கிய நாடுகளில் மீண்டும் காலநீடிப்பை கோரவுள்ள இலங்கை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் மீண்டுமொரு முறை கால நீடிப்பை கோரவுள்ளது.
அமைச்சர் மங்கள சமரவீரவை கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட இலங்கை அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முனைகிறது. இருப்பினும் பல்வேறு தடைகளை கடக்க வேண்டியுள்ளமையால் தாமதங்கள் ஏற்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் தொழில்நுட்ப நடைமுறைக்காக காலநீடிப்பை கோரவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை, இலங்கையில் தொடர்ந்தும் சித்திரவதை கலாசாரம் முன்னெடுக்கப்படுவதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு மனித உரிமைகள் பேரவையின் மார்ச் அமர்வின் போது உரிய வகையில் பதிலளிக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகள் தொடர்பான அறிக்கையாளர் ஜூவான் மெண்டாஸ், தொகுத்துள்ள அறிக்கையில் இலங்கையில் தொடர்ந்தும் சித்திரவதைகள் தொடர்வதாக தெரிவித்திருந்தார்.
மேலும், இதனை மறுத்துள்ள இலங்கையின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என குறிப்பிட்டுள்ளார்.