ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களை கொழும்புக்கு வருமாறு அழைத்தமையை அடுத்து கொழும்பிற்கு செல்வதற்காக வீட்டிலிருந்து பிரதான வீதிக்கு வருகை தந்தபோது (இன்று 30 ஆம் திகதி) யானை தாக்கிய நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு யானை தாக்குதலுக்கு உள்ளானவர் மஹாதிவுல்வெவ,தெவனிபியவர பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையாரான சோமசந்திர (60 வயது)
எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது இன்று 30 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களை கொழும்புக்கு வருமாறு தொகுதி அமைப்பாளர் ஒருவர் விடுத்த கோரிக்கையை அடுத்து கொழும்பு செல்வதற்கு வீட்டிலிருந்து மயில குடாவ என்னும் இடத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்த வேளை காட்டு யானை தாக்கியதாகவும் அதனை அடுத்து இடுப்பு உடைந்த நிலையில் அருகில் உள்ள மஹாதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இதேவேளை இப்பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருவதால் பத்துக்கும் மேற்பட்டவர்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாகவும் நான்கு பேர் பாரிய அளவில் அங்கவீனர்களாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காட்டுயானைகளின் இருந்து பாதுகாக்குமாறும் மெ றவெவ பிரதேசத்திலுள்ள மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்