ஐக்கிய தேசிய கட்சிக்கும் புதிய மாற்றம் இடம்பெறவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்னாயக்க தெரிவித்திருந்தார்.
குறித்த ஊழியர்கள் நியமனம் எதிர்வரும் 31 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு புதிய பொறுப்பு வழங்கப்படவுள்ளது.
கட்சியின் தகவலின் அடிப்படையில், அவரை கட்சியின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் இந்த மாத இறுதியில் உறுதியான தகவல் வெளியாகும் என ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிடப்பட்டுள்ளது.