ஆசிய கால்பந்தாட்டக் கூட்டுச் சம்மேளனத்தினால் நடத்தப்படும் கழகங்களுக்கு இடையிலான ஏஎவ்சி சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் ஜப்பானின் உராவா ரெட் டயமன்ட்ஸ் கழகம் சம்பியனாகியது.
ஜப்பானின் சைட்டாமா நேற்று நடைபெற்ற, நடப்புச் சம்பியனான சவூதி அரேபியாவின் அல் ஹிலால் கழகத்துடனான இரண்டாவது இறுதிப்போட்டியில் உராவா கழகம் 1:0 கோல் விகிதத்தில் வென்றது.
போட்டியின் 48 ஆவது நிமிடததில் அல் ஹிலால் கழக வீரான பெரு நாட்டைச் சேர்ந்த அண்ட்றே கரில்லோ சொந்த கோல் ஒன்றை புகுத்தினார். இது உராவா கழகத்தின் வெற்றிக்கு வழிகுத்தது.
அன்ட்றே கரில்லோ (வலது) – AFP photo
ஏற்கெனவே கடந்த சனிக்கிழமை (29) சவூதி அரேபியாவின் றியாத் நகரில் முதலாவது இறுதிப்போட்டி 1:1 கோல் விகித்ததில் சமநிலையில் முடிவுற்றிருந்தது. இதனால் மொத்தமாக 2:1 கோல் விகித்தில் வென்ற உராவா ரெட் டயமன்ட்ஸ் 3 ஆவது தடவையாக சம்பியனாகியது. 2007,2017 ஆம் ஆண்டுகளிலும் இக்கழகம் சம்பியனாகியிருந்தது.
அல் ஹிலால் கழகமே ஏஎவ்பி சம்பியன்ஸ் லீக்கல் அதிக தடவை சம்பியனான கழகம் ஆகும். 1991, 1999-2000, 2019, 2021 ஆம் ஆண்டுகளில் அக்கழகம் சம்பியனாகியது.