சிக்கிமில் சீனாவுடனான எல்லை பிரச்னை தொடர்பாக இந்திய-சீனா நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை பீய்ஜிங்கில் துவங்கியது.
இந்தியா-பூட்டான்- சீனா நாடுகளின் எல்லை பகுதியான சிக்கிம் மாநிலத்தின் டோக்லா பகுதியில் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்து அங்கிருந்த பதுங்கு குழிகளை அழித்தனர்.
இதில் இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இருநாடுகளிடையே எல்லையில் பதட்டம் அதிகரித்து வந்தது.பதட்டத்தை தணிக்கு விதமாக இரு நாடுகளிடையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் , சீனா சென்றார். தலைநகர் பீய்ஜிங்கில் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யங் ஜெயிச்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.