340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு இன்று இடம்பெறவுள்ளது.
இருப்பினும் வேட்புமனு தொடர்பில் நிலவும் பிரச்சனை காரணமாக மேல்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால உத்தரவின் அடிப்படையில் எல்பிட்டிய பிரதேசசபைக்கான வாக்களிப்பு மாத்திரம் இன்று இடம்பெறாது.
இம்முறை உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் 43 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 222 சுயேட்சைக் குழுக்களுமாகப் போட்டியிடுகின்றன. நாடெங்கிலும் 57252 வேட்பாளர்கள் 8356 உறுப்புரிமைகளுக்காகப் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் ஆணைக்குழு நியமிக்கப்பட்டபின்னர் நடைபெறும் முதலாவது வாக்களிப்பு இன்று நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.