டபுள் பீன்ஸில் உள்ள அதிகளவு கால்சியம், மக்னீசியம் சத்துக்கள் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் எலும்புகளை வலுவாக்கவும் உதவுகிறது.
எலும்புகளை வலுவாக்கும் டபுள் பீன்ஸ் சுண்டல்
தேவையான பொருட்கள்
டபுள் பீன்ஸ் – 1 கப்
சோம்பு – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கரம்மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – 1 டீஸ்பூன்
இஞ்சித்துருவல் – 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
டபுள் பீன்ஸை உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை, இஞ்சித்துருவல் போட்டு தாளித்த பின்னர் வேக வைத்த டபுள் பீன்ஸ், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.
சூப்பரான டபுள் பீன்ஸ் சுண்டல் ரெடி.
இதையும் படிக்கலாம்…சூப்பரான பட்டர் பீன்ஸ் புலாவ்..
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]