எலியனோர் புயலினால் பிரான்ஸ் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இதில் இது வரை 6 பேர் சாவடைந்ததாகவும், 200 மில்லியன் யூரோக்களிற்கு மேல் சேதம் எற்பட்டதாகவுமே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று Rouvres-sur-Aube (Haute-Marne) இல் ஒரு உடலம் கண்டுபிடிக்கப்படதுடன், இழப்பின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. இங்குள்ள அருவியில் மூழ்கி இறந்த ஒரு பெண்ணின் உடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இவரது வீட்டில் இருந்து 300 மீற்றர் தூரத்தில் இவரது உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவர் எழுபதுகளின் வயதுடையவர் என்றும், ஜேர்மனியைச் சேரந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை, Aube இல் ஏற்பட்ட வெள்ளப்பnருக்கைத் தொடர்ந்து, இவர் காணாமற்போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.