நாட்டில் இன்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயு சிலிண்டருக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நாளை முதல் முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
எரிவாயு விநியோகம் தாமதமடைவதற்கான காரணம்

கடந்த 26ஆம் திகதி இலங்கையை வந்தடையவிருந்த 3 ஆயிரத்து 500 மெற்றிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் தாமதமடைந்ததுள்ளது.
இதனால், இந்த எரிவாயு கப்பல் இன்று இலங்கையை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளை முதல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும்.

எனவே, இன்று எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் எரிவாயு அடங்கிய இரண்டு கப்பல்கள் எதிர்வரும் முதலாம் மற்றும் ஐந்தாம் திகதிகளில் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.