எரிமலை குழம்பை கக்கி வரும் கொழிமா எரிமலை: மக்கள் வெளியேற்றம்
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தேசிய அவசர கால சேவைகள் திணைக்களத்தின் தலைவர், “எரிமலையை அண்டி அமைந்துள்ள Yerbabuena மற்றும் La Becerrera ஆகிய கிராமங்களில் வசிக்கும் சுமார் 350 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களில் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்ட்டுள்ளனர். இன்னும் மீதமிருக்கும் மக்களையும் வெளியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
மேற்கு மெக்ஸிகோவின் கொழிமா மற்றும் ஜலிஸ்கோ ஆகிய மாநிலங்களுக்கு இடையில் அமைந்திருக்கும் கொழிமா எரிமலை, அதிகளவில் இயங்கு தன்மை கொண்டதாகும்.
இதேவேளை மெக்ஸிகோவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எரிமலைகள் காணப்படுவதுடன்,அவற்றில் 14 மாத்திரமே இயங்கு நிலையில் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டதத்க்கது.