எதிர்காலத்தில் பெட்ரோலின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும், எனினும் தற்போது அவ்வாறான திட்டம் எதுவும் இல்லை என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்டதில் QR ஒழிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
15 ரூபா வரையில் அதிகரிக்கப்படலாம்

எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கு தற்போதைக்கு எந்த தீர்மானமும் இல்லை. எரிபொருள் விலை அதிகரித்தால் 10 – 15 ரூபா வரையில் மாற்றம் ஏற்படலாம்.
ஆனால், உக்ரைன் – ரஷ்யா யுத்தம் போன்ற உலக நிலைமைகளை தன்னால் கட்டுப்படுத்த முடியாது எனவும், இவ்வாறான நிலையில் விலை எவ்வளவு குறையும் எனவும் கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.