எரிபொருள் விலையை உயர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் உயர்வடைந்து செல்லும் நிலையில் அதற்கு நிகராக உள்நாட்டிலும் எரிபொருள் விலை உயர்த்தப்பட வேண்டுமென அரசாங்கத்திடம் கோருவதாக பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இன்று (10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தற்பொழுது ஒரு லீற்றர் டீசலை விற்பனை செய்வதனால் 128 ரூபா நட்டம் ஏற்படுவதாகவும், ஒரு லீற்றர் பெற்றோலை விற்பனை செய்வதனால் 80 ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களின் விலைகளை உயர்த்தும் அதிகாரம் பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்திற்கு மட்டும் இருந்தால் நிச்சயமாக விலை உயர்த்தப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய விலை அதிகரிப்பிற்கு மத்தியில் அரசாங்கத்தினால் தொடர்ந்தும் நட்டத்திற்கு எரிபொருளை விற்பனை செய்ய முடியும் என தாம் கருதவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]