மூன்றாம் தரப்பினரிடம் இருந்து எரிபொருட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருளை சேகரிக்கும் மூன்றாம் தரப்பினர் ஏனைய திரவங்கள் சிலவற்றை கலந்து எரிபொருளை விற்பனை செய்வதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் வாங்க காத்திருக்கும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.
மேலும், குறித்த விடயம் தொடர்பான தகவல் தெரிந்தால் உரிய தரப்பினரிடம் அறிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.