எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்தவர் லொறி மோதி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் 28 ஆம் திகதி செவ்வாய்கிழைமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
28 ஆம் திகதி இரவு வரை தர்கா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து குறித்த நபர் 29 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை வீட்டிற்கு செல்வதற்கு புறப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மதுகம நோக்கி பயணித்த லொறியில் மோதி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
அளுத்கம, தர்கா நகரைச் சேர்ந்த நபர் 53 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்