எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் இராணுவஅதிகாரியொருவர் பொதுமகனை காலால் உதைக்கும் வீடியோ சமூகஊடகங்களில் வெளியாகியுள்ளது.
எரிபொருள் நிரப்புநிலையத்தில் நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.நபர் ஒருவரை இராணுவத்தினர் பிடித்து இழுத்து அதிகாரியின் முன்னால் கொண்டுசெல்வதையும் அவர் காலால் உதைப்பதையும் வீடியோ காண்பிக்கின்றது.பின்னர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயல்கின்றார்.
இராணுவஅதிகாரியொருவர் இன்னொருவரை அழைப்பதையும் அவருடன் தர்க்கத்தில் ஈடுபடுவதையும் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் காணப்படும் நபரை எச்சரிப்பiயும் காணமுடிகின்றது.