எரிபொருள் மற்றும் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலில் ஈடுப்படுபவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு வலுசக்தி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு சுற்றுலாத்துறை சேவைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டங்களை செயற்படுத்துமாறு உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட் தாக்கத்தின் காலத்தின் பின்னரான காலப்பகுதியில் சுற்றுலாத்துறைசேவை கைத்தொழில் முன்னேற்றமடைந்துள்ளது.
இவ்வருடத்தின் முதல் காலப்பகுதியில் மாத்திரம் 235,000 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்கள். சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த உரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
தவிர்க்க முடியாத காரணிகளினால் எரிபொருள் மற்றும் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
அரசியல் காரணிகளுக்கு அப்பாற்பட்டு பொது காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய நெருக்கடி நிலைமை குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
எரிபொருள் மற்றும் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலில் ஈடுப்படுபவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு வலுசக்தி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஓரிரு நாட்களில் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். நாட்டின் தற்போதைய நிலைமை சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தீர்மானங்களை செயற்படுத்துமாறு சுற்றுலாத்துறை சேவைத்துறையுடன் தொடர்புடைய உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]