எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த விலை திருத்தத்தில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்மாதத்துக்கான எரிபொருள் விலை திருத்தம் கடந்த 4ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.