எரிபொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்தால், அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட மாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரசித்தமாக கருத்து தெரிவித்த அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியும்.
எவ்வாறிருப்பினும், நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக, எரிபொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்தால், அதனை முன்வைக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.