எம்.எச்.17 விமானத்தை சுட்டு வீழ்த்தியது எப்படி? சர்வதேச குழு வெளியிட்ட விசாரணை வீடியோ
நெதர்லாந்தில் இருந்து மலேசியா சென்ற எம்.எச்.17 விமானத்தை சுட்டு வீழ்த்தியது மற்றும் அது தொடர்பான விசாரணை விவரங்கள் அடங்கிய வீடியோவை விசாரணைக்குழு வெளியிட்டுள்ளது.
எம்.எச்.17 விமானத்தை சுட்டு வீழ்த்தியது எப்படி? – சர்வதேச குழு வெளியிட்ட விசாரணை வீடியோ
ஆம்ஸ்டர்டாம்:
நெதர்லாந்தில் இருந்து 2014 ஜூலை மாதம் 17ஆம் தேதி மலேசியாவுக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் எம்.எச்.17 ரக பயணிகள் விமானம் உக்ரைன் வான்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. உக்ரைன் ராணுவத்துக்கும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் இடையே உக்கிரமாக சண்டை நடைபெற்று வந்த போது ரஷிய எல்லைப் பகுதி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில், 15 விமான ஊழியர்கள் உட்பட விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்தனர்.
விமானத்தை ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதிகள் தான் சுட்டு வீழ்த்தினர் என உக்ரைன் குற்றம் சாட்டியது. ஆனால், உக்ரைன் படைகள்தான் பொறுப்பு என ரஷியாயும் பிரிவினைவாதிகளும் கூறின.
இது குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த சர்வதேச விசாரணைக்குழு தனது விசாரணை அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.
அதில், ரஷிய பகுதியில் இருந்து உக்ரைனுக்கு கொண்டு வரப்பட்ட பக் ஏவுகணையால் எம்.எப்.17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதன்பின்னர் ஏவுகணை லாஞ்சர், ரஷ்ய பகுதிக்கே கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏவுகணை வீசப்பட்ட இடமான கிழக்கு உக்ரைன் அப்போது ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விமானம் புறப்பட்டுச் சென்றது முதல் சுட்டு வீழ்த்தப்பட்டது வரையில் நடந்த சம்பவம் மற்றும் விசாரணை விவரங்களை தெளிவாக விளக்கும் வீடியோ ஒன்றையும் விசாரணைக்குழு வெளியிட்டுள்ளது.
– See more at: http://www.canadamirror.com/canada/70700.html#sthash.AlvLzKAY.dpuf