மக்களின் ஏகப் பிரதிநிதித்துவ கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் இருக்கின்றது என்பதை தமிழ் மக்கள் இந்தத் தேர்தலின் ஊடாகவும் எடுத்துக்காட்டுவார்கள். நாளைமறுதினம் 10ஆம் திகதி வீடு சின்னத்துக்கு நேரே அவர்கள் இடும் புள்ளடி இதை நிரூபித்துக் காட்டும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக பதவி களில் ஏறியவர்களும், அரசியலுக்கு வந்தவர் களும் மற்றும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களும் கூட்டமைப்பின் தலைமையைக் கண்டபடி விமர்சித்து வருகின்றார்கள்.
தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் முயற்சிகளில் கூட்டமைப்பின் தலைமை நிதானத்துடன் ஈடுபடுகின்றது. சரியான பாதையில்தான் கூட்டமைப்பு செல்கின்றது. எனவே, எம்மை விமர்சிப்பவர்கள் எதிர்வரும் 10ஆம் திகதிக்குப் பின்னர் வாயடங்கிப் போவார்கள்.
தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதித்துவக் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் இருக்கின்றது என்பதை தமிழ் மக்கள் இந்தத் தேர்தலின் ஊடாகவும் எடுத்துக்காட்டுவார்கள். எதிர்வரும் 10ஆம் திகதி “வீடு’ சின்னத்துக்கு நேரே அவர்கள் இடும் புள்ளடி இதை நிரூபித்துக்காட்டும். இந்தத் தேர்தலை இந்த நாடு மாத்திரம் அல்ல, பன்னாட்டுச் சமூகமும் பார்த்துக்கொண்டிருக்கின்றது. இதை உணர்ந்து வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது, என்றார்.