நாய்களுடன் மனிதனுக்கு எப்பொழுதுமே ஒரு உறவுப்பாலம் உண்டு. நாய்களை நாம் தனியாக விட்டுவிட்டு ஒரு நாலைந்து நாள் கழித்து மீண்டும் வீட்டிற்கு சென்றால் வீட்டிலிருக்கும் நம்முடைய காஸ்ட்லி ஷூக்கள் பிய்ந்து போய் மூலையில் இருக்கும்.
இது குறித்து பிரிட்டனின் நாய்கள் மற்றும் பூனைகள் சங்கத்தின் தலைவர் கொலின் டெனன்ட் கூறியதா வது: நாய்களுக்கு பிராண்டுவது என்பது, மனிதர்கள் ஒரு கதவைத் திறந்து அறைக்குள் நடப்பதை பார்ப்பது போன்றது. இது ஒரு உளவியல் நடவடிக்கை. நாய்கள் குறிப்பாக தனியாக விடப்படும் நாய்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
மனிதர்களை போலவே எதையும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நாய்களுக்கும் உண்டு. குறிப்பாக செருப்புகளை கடிப்பதை அவை பெரிதும் விரும்புகின்றன.
அவற்றிற்கு அந்த சுவை மற்றும் நாற்றம் பிடித்ததாக இருக்கிறது. செருப்புகள் பெரும்பாலும் தோலில் செய்யப்படுவதால் அவை நாய்களுக்கு விலங்குகளை ஞாபகப்படுத்துகின்றன.
அவை அசைவ விரும்பி. இதேபோலதான் மரச்சாமான்களை நாய்கள் பிராண்டுவதும் அதற்கு பிடித்தமானதாக உள்ளது. இவ்வாறு டெனன்ட் தெரிவித்துள்ளார்.