“விக்ரம் சார்ட்ட வருடத்துக்கு ஒருமுறையோ இரண்டு முறையோ போனில் பேசுவேன். சந்திப்பேன். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ பாடல்கள் கேட்டுட்டு கூப்பிட்டு பேசினார். அந்தப் படத்தைப் பார்த்துட்டும் கூப்பிட்டு பேசினார். இரண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணணும்ங்கிற முயற்சி காக்க காக்க டைம்ல இருந்து போயிட்டு இருக்கு. இந்தச் சமயத்தில் வழக்கம்போல் போனில் பேசும்போது ‘துருவ நட்சத்திரம்’ லைனை அவர்ட்ட போன்ல சொன்னேன். ‘ரொம்ப நல்லா இருக்கு. எப்ப பண்ணலாம்’னு கேட்டார். எனக்கும் தனுஷுடன் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ இருக்கு. உங்களுக்கும் ‘ஸ்கெட்ச்’ போயிட்டு இருக்கு. இதை முடிச்சிட்டு பண்ணிக்கலாம்னு சொன்னேன். ‘ஸ்கெட்ச்’சுக்குப் பத்து நாள், உங்களுக்குப் பத்து நாள்னு பண்ணிக்கலாம்’னு சொன்னார். அந்தச் சமயத்தில் தனுஷ் படம் மூணு மாதம் பிரேக் ஆகி அவர் ‘வடசென்னை’ ஷுட்டிங்க்குப் போயிட்டார். வேறு எந்த விஷயங்களையும் யோசிக்காம, ‘துருவநட்சத்திர’த்துக்குக் கிளம்பிட்டோம். இப்ப விக்ரம் சாரை வெச்சு 50 நாள் ஷூட் பண்ணிட்டோம். இன்னும் 20 நாள் ஷூட் போனால் படம் முடிஞ்சிடும்.” – கௌதம்மேனனின் மனதிலிருந்து வருகின்றன வார்த்தைகள். பரபரப்பான பட வேலைகளுக்கு இடையில் நேரம் ஒதுக்கிப் பேசினார்.
“துருவ நட்சத்திரம்’ குறிப்பிட்ட 10 பேரைப்பற்றின கதை. இன்டெலிஜென்ஸ், நெட்ஒர்க்கிங், சீக்ரெட் டீம், கமாண்டோ… போன்ற விஷயங்கள் உள்ள படம். நாட்டின் பாதுகாப்பு. விமானத்துறை, இராணுவம், கப்பல்படை, உளவுத்துறை இவர்களைத் தாண்டி, ஒரு டீம் தேவைப்படுது. இது எல்லா நாடுகளிலுமே லைசன்ஸ் டு கில் பிளஸ் ரெட் டேப்பிசம் இல்லாம இறங்கி ஒர்க் பண்ணிட்டு போயிடலாம். யாருனு தெரியாது. நமக்கு வேண்டிய ஒரு விஷயம் பண்ணிட்டாங்கனு புரியும். அவங்களுக்கு ரூல்ஸ் ரெகுலேஷலாம் எதுவுமே கிடையாது- ஆனால் எமர்ஜென்சியில இறங்கி ஒர்க் பண்ணுவாங்க. மேலும் உறவுத்துறை, போலீஸ் டிபார்ட்மென்டுக்குத் தரவேண்டிய விஷயங்கள் இவங்கமூலமாகவும் போகும். செட் ஆஃப் கேரக்டர்ஸ். ஒருத்தர் அந்த டீமை செட் பண்ணி ஒர்க் பண்றமாதிரியா விஷயம். எல்லா நாடுகள்லயும் இது இருக்கு. இந்தியாவிலும் இருக்கு. யாருக்கும் தெரியாது. நாட்டுக்காக தங்களோட அடையாளங்களை மறைச்சு ஒர்க் பண்ற டீமைப் பற்றிய கதை. அவங்க யார், என்ன பண்றாங்க, அவங்களோட வலி, சந்தோஷம், வாழ்க்கைனு நிறைய விஷயங்கள் இதில் பண்ணலாம்னு இருந்தது விக்ரம் சாருக்குப் பிடிச்சிருந்தது. ஒவ்வொரு வருஷமும் ஒரு பார்ட்னு இந்தப் படத்தை மூணு பார்ட் பண்ணலாம்னு பிளான் பண்ணியிருக்கோம். ‘பாகுபலி’யில் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்னார் என்ற விஷயத்தை முதல் பகுதி லூப்பா வெச்சிருந்த மாதிரி இதில் ஒரு விஷயத்தை ஓப்பன் பண்ணி வெச்சிட்டு ஒரு சீரிஸா ‘துருவ்’ கேரக்டரை வெச்சு பண்ணலாம்னு ஐடியா. நிச்சயம் பெரிய பிரமாண்டமான ஃபீல் ஸ்கிரீன்ல உங்களுக்குக் கிடைக்கும்.
‘இவங்க உலகத்துக்குள்ள நான் உங்களைக் கூட்டிட்டுப் போறேன். அந்த உலகத்துக்குள்ள நீங்க வர்றீங்கனு நினைச்சு இந்தப் படத்தைப் பாருங்க….’ங்கிற டிஸ்க்ளைமரோடத்தான் இந்தப்படம் ஆரம்பிக்கும். நாட்டுக்காக தங்களோட அடையாளத்தை மறைச்சுகிட்டு ஒர்க் பண்ற 10 பேரோட உலகத்துக்குள்ள உங்களை அழைச்சிட்டு போகேப்போறேன். துருக்கி, ஜார்ஜியா, ஸ்லோவேனியா…னு என் படங்களுக்காக இதுக்கு முன் இத்தனை நாடுகள் பயணமானது இல்லை. திருப்தியா இருக்கு.”