என்ர தொழில் சட்டம்பி
என்ர பள்ளிக்கூடம் இருப்பதோ
வீட்டிலிருந்து
தொண்ணூற்றாறு கட்டை
போறதுக்கு மட்டும்
இரண்டரை லீற்றர்
எண்ணை அடிக்கோணும்…
அப்ப கணக்கு பாருங்கோவன்
போய்வர எவ்வளவு காசு எண்டு….
உது மட்டுமோ
கிடங்கு மேடு பள்ளம் எண்டு
வீதியெங்கணும்
ஏறி இறங்கவே
ஒரு லீற்றர் ஊத்தோணும்…
அப்பாடா…
போய் வாறதுக்கு எண்டு
எண்ணெய்க்கு மட்டும்
மயிலுள்ள தாள்காசு
ரண்டெண்டாலும் வேணும்
இனி
ரீ பிளேண்ரி சோத்துக்கும்
கணக்கு பாருங்கோவன்…
இந்தவாண்டு தொடக்கத்தில
மாத சம்பள ஏற்றம்
கொஞ்சம் அதிகம்தான்
சட்டம்பிமாருக்கு மட்டும்…
இருந்துமென்ன
எல்லாமே
ஆனைவிலை குதிரைவிலை
சாணென
சம்பளம் கூடுது
வாழ்க்கைச்செலவோ
முழமென ஓடுது…
இனி நான்
எங்கை போய் முட்டி மோத
என்ர தலையை…
கிழமைக்கு
நாலஞ்சு நாளெண்டு
லீவெடுப்பதை தவிர
வேறு வழி
எனக்கு தெரியல ஆத்தா…
| சமரபாகு சீனா உதயகுமார்