என் மேல் தேங்காயை யாராவது வீசினால் அதை எடுத்து அவர்கள் மீது திருப்பி வீசுவேன் என்று நடிகை ஏமி ஜாக்சன் தெரிவித்துள்ளார். தெலுங்கு படத்தில் தனது தொப்புளில் தேங்காயை வீசியது பற்றி நடிகை டாப்ஸி அண்மையில் தெரிவித்திருந்தார். அவரது பேட்டியை பார்த்து டோலிவுட் ரசிகர்கள் கடுப்பானார்கள். இந்நிலையில் ஏமி ஜாக்சன் டாப்ஸிக்கு ஆதரவு அளித்துள்ளார். இது குறித்து ஏமி கூறியிருப்பதாவது,
தொப்புளில் தேங்காயை வீசுவது கொடுமை. இதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். இது தெலுங்கு திரையுலகில் நடந்தது என்று நினைக்கிறேன். நல்ல வேளை எனக்கு இது போன்று எதுவும் நடந்தது இல்லை. அதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு யாராவது அப்படி செய்தால் அந்த தேங்காயை எடுத்து அவர்கள் மீது திருப்பி வீசிவிடுவேன். தெரியும் என் மீது தேங்காயை வீசினால் திருப்பி அடிப்பேன் என்று அவர்களுக்கு தெரியும். அதனால் யாரும் அப்படி எனக்கு செய்ய மாட்டார்கள். நான் அருமையான இயக்குனர்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. நடிகை அனைத்து நடிகைகளுக்கும் அப்படி நடப்பது இல்லை. அது கொடுமையானது. எனக்கு இது போன்ற சூழலை கையாள்வது பிடிக்காது என்று ஏமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.